விஜய்யை சீண்டிய OG SAMBAVAM Song..! Good Bad Ugly பாடலால் வெடித்த சர்ச்சை..! போர்க்களமான சமூக வலைத்தளங்கள்..!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அட்லி திரைப்படத்தின் OG SAMBAVAM என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. அரங்கம் அதிரும் இசை ஆர்ப்பாட்டமான பாடல் வரிகள் என அதகளமாக உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இந்த பாடலை Vishnu Edavan எழுதியுள்ளார். GV Prakash Kumar, Adhik Ravichandran ஆகியோர் பாடியிருக்கின்றனர். நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது இந்த பாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் பாடலை கேட்டு திருப்தி இந்த பாடலில் கிடைப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பாடல் வரிகள் மூலம் இந்த பாடலில் நடிகர் விஜய்யை இரண்டு சீண்டிருக்கிறார்கள். அது எதிர்சியாக நடந்தது என்று கூட படக்குழு கூறலாம்.. வேண்டுமென்றே வைத்தார்கள் என்று ரசிகர்களும் கூறலாம்.. ஆனால், எப்படியான வரிகள் இந்த பாடலில் இடம் பெற்றிருக்கிறது.. என்று இங்கே பார்க்கலாம். பாடல் நடுவே.. "பத்தாது டா உனக்கு தோட்டா.. சுத்தாதடா பேரைக் கேட்டா.. துப்பாக்கி, பீரங்கி ரெண்டுமே வந்தாலும் ஒ**ல சம்பவம்டா.." என்ற ...