தனக்கு வாழ்க்கை கொடுத்த பிரபல தயாரிப்பாளருக்கு நடிகர் விஜய் கொடுத்த பரிசு..!
விஜய் தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் "பூவே உனக்காக" . இப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தான் தயாரித்து இருந்தார், அதை தொடர்ந்து திருப்பாச்சி, ஜில்லா என பல விஜய் படங்களை தயாரித்துள்ளார். இவர் தங்கள் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளாராம். இதற்காக விஜய்யை சந்திக்க அவர் சென்றுள்ளார். ஆனால், தன்னை வைத்து படம் எடுத்ததற்கு பரிசாக அவரை சுமார் 2 1/2 மணி நேரம் காக்க வைத்து, வெறும் சில நிமிடம் மட்டுமே பேசி அவரை அனுப்பி வைத்தாராம் நடிகர் விஜய். அதிலும், படம் செய்யலாம் என்று உறுதியாக சொல்ல வில்லையாம், இந்த தகவலை ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தான், தன்னுடைய அடுத்த படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்துள்ளார் விஜய்என்ற தகவல் பரவி வருகின்றது.