சடலத்துடன் உடலுறவு கேள்விப்பட்டிருப்பீங்க.. இந்த கொடூரன் செய்த காரியத்தை பாருங்க.. நாடே நடுங்கும் கொடூரம்.. வைரல் வீடியோ..
புர்கான்பூர், அக்டோபர் 18: மத்திய பிரதேசத்தின் புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள காக்னார் சமூக சுகாதார மையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் உடலை ஒரு 25 வயது இளைஞன் தரதரவென இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பினவரையில் உள்ள சிசிடிவி கேமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளது. இந்தக் கோரச் செயல் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்ததாகத் தெரியவந்துள்ளது, ஆனால் சமீபத்தில் வெளியான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது. சம்பவ விவரங்கள்: அதிர்ச்சியின் உச்சம் காக்னார் சமூக சுகாதார மையத்தின் பினவரையில் பிரேத பரிசோதனைக்காக இளம்பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு நோட்டமிட்டுக் கொண்டிருந்த 25 வயது நிலேஷ் பிலாலா என்ற இளைஞன், யாரும் இல்லாததை உறுதி செய்த பிறகு திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்தான். உடலை தரையில் இழுத்துச் சென்ற அவன், பிரேத உடலைப் பரிசோதிக்காமலேயே பாலியல் பலாத்காரத்தை நிகழ்த்தியதாக சிசிடிவி காட்சிகள் தெரிவிக்கின்றன. டாங்கியாபட் கிராமத்தைச் சேர்ந்த ...