செங்கோட்டையன் மீது மனைவி, மகன் கொடுத்த மோசமான புகார்! கோபியை அதிர வைத்த EPS!
கோபிச்செட்டிப்பாளையம் (கோபி) தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, முன்னாள் அமைச்சரும், முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன்ஐ கடுமையாக விமர்சித்துப் பேசினார். செங்கோட்டையன் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “இங்கு செங்கோட்டையன் என்ற ஒருத்தர் இருந்தார்” என்று தொடங்கிய ஈபிஎஸ், அவரைப் பற்றி இதுவரை பேசாததாகக் கூறினார். “கழக நிர்வாகிகள் இரவு பகல் பாராமல், தலைவர் காலத்திலும் அம்மா காலத்திலும் ரத்தத்தை விரிய மண்ணில் சிந்தி உழைத்ததால்தான் அவர் எம்எல்ஏ ஆனார். நீங்கள் எல்லோரும் பாடுபட்டுதான் அவர் எம்எல்ஏ ஆனார்” என்று கூறிய ஈபிஎஸ், பின்னர் “சுயநலம், திமிர், அகங்காரம்” காரணமாக அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். கட்சிக் கட்டுப்பாடு அவசியம் “கட்சிக்கு கட்டுப்பாடு தேவையா இல்லையா? கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நீக்கப்பட வேண்டும். அம்மா காலத்திலும், தலைவர் காலத்திலும் அதிமுக அப்படித்தான் கடைபிடித்தது. அதையே நாங்களும் கடைபிடித்தோம்” என்று அவர் வலியுறுத்தினார். ஈபிஎஸ் மேலும் கூறி...