அடக்கொடுமைய.. காதலனால் ஏமாற்றப்பட்ட நடிகை.. அதற்கு ஆசைப்பட்ட உதவி கமிஷனர்.. கேக்கவே காது கூதுசு.. ச்சைக்..
சென்னை, நவம்பர் 30 : சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், சினிமாவில் துணை நடிகையாகவும், இன்ஜினியரிங் பட்டதாரியாகவும், இன்டீரியர் டிசைன் நிறுவன உரிமையாளராகவும் பிரகாசித்து வந்தார். ஆனால், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் ஏமாற்றம், போலீஸ் ஊழல், பாலியல் தொல்லை என அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் அவரை உலுக்கியுள்ளன. இந்த சம்பவம் சென்னை போலீஸ் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் மூன்று உயர் அதிகாரிகள் 'காத்திருப்போர் பட்டியல்'க்கு மாற்றப்பட்டுள்ளனர்! இந்த இளம்பெண்ணின் கதை, கல்லூரி காலத்திலிருந்து தொடங்குகிறது. அவருடன் படித்த 28 வயது அலெக்ஸ் என்பவருடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு இருந்தது. திடீரென அலெக்ஸுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அதே சமயம், கனடாவில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை கிடைத்ததால், குடும்பத்துடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார். ஆனால், தூரம் அவர்களின் தொடர்பை துண்டிக்கவில்லை. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். 2024-ஆம் ஆண்டு ஒரு நாள், வீடியோ காலில் அலெக்ஸ் மனமுடைந்து பேசினார். "மனைவியுடன் பிரச்சனை... விவாகரத்து செய...