Posts

Showing posts with the label DSP suspension

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.! - எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவு!

Image
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இவர், தனக்கு வழங்கப்பட்ட அரசு வாகனம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதனால் அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியதாக இருந்ததாகவும் கூறி, அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  சுந்தரேசன், இது உயர் அதிகாரிகளின் பழிவாங்கல் நடவடிக்கை என்று குற்றம்சாட்டினார். 1996-ம் ஆண்டு பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர், மயிலாடுதுறையில் கடந்த நவம்பர் முதல் 1,200 மதுவிலக்கு வழக்குகளை பதிவு செய்து, 700 பேரை கைது செய்து, 23 சட்டவிரோத மதுக்கடைகளை மூடியுள்ளார்.  ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வாகனம் பழுது காரணமாக எடுக்கப்பட்டதாகவும், மாற்று வாகனம் வழங்கப்பட்டதாகவும் மறுப்பு தெரிவித்தார்.  சுந்தரேசனின் ஊடகப் பேட்டிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள், 1973-ஐ மீறியதாகக் கருதப்பட்டு, தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நடத்திய விசாரணையில்...