அதெல்லாம் பண்ண முடியாது! மாதம்பட்டிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம் ஜாய் கிரிசில்டா வழக்கில் நடந்தது என்ன?
சென்னை, நவம்பர் 25, 2025 : பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண ஏமாற்று புகார் கூறி சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்ட ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டாவுக்கு பெரும் வெற்றி! அவரது பதிவுகளால் 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு சமூக வலைதள சுதந்திரத்துக்கு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டா, சமையல் உலகின் ஸ்டாரான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டார். இந்த வீடியோக்கள் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. ஆனால், இதனால் தங்கள் நிறுவனத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக கூறி, மாதம்பட்டி பாகசாலா ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. நிறுவனத்தின் வழக்கறிஞர் வாதிடுகையில், "ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 11 வரை, ஜாயின் வீடியோக்களால் கிட்டத்தட்ட 11 கோடி 21 லட்சம் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கேட்டரிங் ஆர்டர்கள் ரத்த...