Posts

Showing posts with the label mistaken identity

“உண்மை என்னவென்று தெரியாமல்..” சோசியல் மீடியாவில் திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்.. வெளிவந்த பகீர் உண்மை..!

Image
அரியலூர் மாவட்டம், ஓரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் அஜய், தனது புதிய பைக் வாங்கிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கடந்த இரண்டு நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புகைப்படத்தில் அஜய்க்கு அருகில் இருந்த பெண்ணை அவரது தாய் என தவறாகப் புரிந்து கொண்டு, “ஏழைத் தாய் மகனுக்கு 2.75 லட்சம் ரூபாய் பைக் வாங்கிக் கொடுத்தாரா? நகை எதுவும் இல்லாத ஏழைப் பெண் இவ்வளவு பணம் எங்கிருந்து?” என்பது போன்ற கேள்விகளும், கடுமையான விமர்சனங்களும், மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால் உண்மை அதுவல்ல. புகைப்படத்தில் இருந்த பெண் அஜயின் தாய் இல்லை; அவரது அத்தை (தந்தையின் தங்கை) திருமதி தனலட்சுமி. அன்றைய தினம் அஜய் திடீரென அத்தையை அழைத்துச் சென்றதால், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த அவர் நகை எதுவும் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது. “எங்கள் ஊரில் யாரும் 24 மணி நேரமும் நகை போட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். வெளியில் ஃபங்ஷனுக்கு போகும்போதுதான் போடுவார்கள். நான்தான் அத்தையிடம் சொல்லாமல் திடீரென அழைத்துச் சென்றேன். என் அம்மா பணம் கட்டிக் கொண்டிருந்ததால், அத்தைக்குத்தான் முதலில் போட்...