Posts

Showing posts with the label election dynamics

TVK-வுக்கு ஓட்டு போட்டால் திமுக வெற்றி பெறும் என எப்படி கூறுகிறார்கள்? இதோ விளக்கம்!

Image
சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக)க்கு வாக்களிப்பது திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து வாதிடுகின்றனர். இது வெறும் “பேப்பர் கணக்கு” மட்டுமே எனக் கூறப்படும் நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாதத்தை அவர்கள் விளக்குகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தொகுதியை உதாரணமாகக் காட்டி அரசியல் பகுப்பாய்வாளர்கள் இந்த விளக்கத்தை முன்வைக்கின்றனர். 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் 86,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 83,000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வெற்றி வித்தியாசம் வெறும் 3,000 வாக்குகள் மட்டுமே. இங்கு அதிமுக பெற்ற 86,000 வாக்குகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் என்று விமர்சகர்கள் சொல்கின்றனர்: அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகள் திமுகவுக்கு எதிரான வாக்குகள் தவெக திமுகவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதால், திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களின் ஒரு பகுதி வாக்குகளை தவெக பிரித்தெடுக்கும் ...