Posts

Showing posts with the label mysterious suicide

விஜய்க்கு எதிராக போஸ்டர்.. தவெகவினரிடம் சிக்கிய இளைஞர்.. தூக்கில் பிணமாக தொங்கிய அதிர்ச்சி பின்னணி..

Image
நாகப்பட்டினம், அக்டோபர் 2: கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான நடிகர்-அரசியல்வாதி விஜயை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் மர்ம மரணம், அரசியல் கட்சிகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், பிரதாபராமபுரம் கிராமத்தில் இரு இளைஞர்கள் சுவர்களில் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அவர்களிடம் விசாரித்தார். "நீங்கள் யார்? எதற்காக மாணவர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டுகிறீர்கள்?" எனக் கேட்டபோது, போஸ்டர் ஒட்டிய இளைஞர்களில் ஒருவர், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பிரமுகர் எடிசன் உத்தரவின்பேரில் இதனைச் செய்வதாகத் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், "கொடுத்தால் எதுவாக இருந்தாலும் ஒட்டுவீர்களா? சம்பளத்துக்காகவா இதைச் செய்கிறீர்கள்?" என திவாகர் கேள்வி எழுப்பினார்....