இமயமலை யாத்திரை செல்லும் விஜய்.. காரணம் என்ன..? கசிந்த அதிர வைக்கும் தகவல்கள்.. அரசியலில் இருந்து விலக முடிவு..?
சென்னை, அக்டோபர் 24 : தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம், அவரது அரசியல் பயணத்தின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதமாக பொதுவெளியில் தோன்றாமல், கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கும் விஜய், மனநலப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், மீட்புக்காக இமயமலை யாத்திரை திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரச்சார கூட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூட்டம் சேர்ந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, அவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளனர் என்றாலும், பலியானவர்களின் குடும்பங்கள் இழப்பை ஈடுகட்ட முடியாத துயரத்தில் தவிக்கின்றனர். சம்பவத்திற்கு கட்சி நிர்வாகத்தில் தவறுகள் இருந்ததாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மதியழகன் உள்ளிட்ட கட்சி செயலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை வைத...