தேவையில்லாமல் சிக்கிய தேவயானியின் கணவர்.. "ஹே..ராஜ் அவங்க உன்னை கலாய்க்குறாங்க"
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னாள் இயக்குநரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன், சமீபத்திய நேர்காணல்களில் பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களைப் பற்றி வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் இயக்கிய சில படங்கள் மட்டுமே ஹிட் ஆன நிலையில், தற்போது அவரது கருத்துகள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. ராஜகுமாரன், இயக்குநர் விக்ரமனிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். அஜித்குமார் நடித்த 'நீ வருவாய் என' என்ற ஒரேயொரு ஹிட் படத்தை இயக்கியுள்ளார். அதன்பிறகு விக்ரம் நடித்த 'விண்ணுக்கும் மண்ணுக்கும்', 'காதலுடன்', 'திருமதி தமிழ்' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கில் 'சிவராம்' ஆகியவை படுதோல்வி அடைந்தன. இந்த ஐந்து படங்களிலும் நாயகியாக தேவயானி நடித்துள்ளார். சந்தானம் நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் 'ராஜ்' என்ற கதாபாத்திரத்தில் காமெடியனாக தோன்றிய ராஜகுமாரன், அதன்பிறகு சினிமாவில் குறைவாகவே தென்பட்டார். தற்போது நேர்காணல்கள் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்து வருகிறார். ந...