இந்த வயசுலயும் இப்படியா? நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா! பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!
90களின் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதா, திரையுலகில் இருந்து விலகிய பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது கைலாச நாட்டின் பிரதமராக பெயர் வாங்கியுள்ள அவர், மீண்டும் சினிமா உலகுக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரஞ்சிதா 1992-ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘நாடோடித் தென்றல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு கார்த்திக், பிரபு, சத்யராஜ், அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். கவர்ச்சியான கதாபாத்திரங்கள் முதல் குடும்பப் பெண்ணின் பாத்திரங்கள் வரை எந்த ரோலையும் சிறப்பாக கையாண்டு ‘வெர்சடைல் ஆக்ட்ரஸ்’ என்ற புகழைப் பெற்றவர் ரஞ்சிதா. 2000-களின் பிற்பகுதியில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தனது புகழைத் தக்க வைத்திருந்தார். எனினும், 2010-ம் ஆண்டு சாமியார் நித்யானந்தாவுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானது அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக ...