ஒரு ஆசிரியர் செய்த கேவலமான செயல்.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..
கிருஷ்ணகிரி, நவம்பர் 24, 2025 : கல்விக்கூடங்கள் என்றாலே அறிவின் கோயில்கள், ஆசிரியர்கள் என்றாலே குருமார்கள்! ஆனால், இந்த நம்பிக்கையை சிதைத்து, ஒரு அரசுப் பள்ளியை கலவிச் சாலையாக மாற்றிய கொடூர சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் அப்பாவி மாணவி ஒருவரை, மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து, அவளை கர்ப்பமாக்கிய பயங்கரம் - இது வெறும் செய்தி அல்ல, சமூகத்தின் முகத்தில் அறையும் அவலக்குரல்! பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த அநீதி, அந்த சிறுமியின் வாழ்க்கையை இருளில் தள்ளியது. ஆசிரியர்களான ஆறுமுகம் (37), சின்னசாமி (57), பிரகாஷ் (37) - இவர்கள் மூவரும், பள்ளி வளாகத்திலேயே தங்கள் கொடூர ஆசையை தீர்த்துக் கொண்டனர். முதலில் ஒரு ஆசிரியர் தொடங்கிய தகாத தொடுதல், பின்னர் மிரட்டல்களாக மாறியது. "தேர்வில் தோல்வியடையச் செய்வேன், மதிப்பெண்களைக் குறைப்பேன், உன் பெற்றோரிடம் உன்னைப் பற்றி மோசமாகச் சொல்வேன்" என்று பயமுறுத்தி, அந்த அப்பாவி சிறுமியை தங்கள் வலையில் சிக்க வைத்தனர். ஆசிரியர்கள் மட்டும் பயன்படுத்தும் கழிவறை - அது தான் இவர்களின் கொட...