Posts

Showing posts with the label Nadigar Thilagam Sivaji

பள்ளிப்பாடத்தில் சிவாஜி - குழந்தகளுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் - முன்னணி இயக்குனர் சாடல்..!

Image
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி தற்போது பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனைப் பற்றி மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் கள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் என்று புத்தகத்தில் உள்ள விஷயங்கள் தான் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு சினிமா துறையினர் பலரும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதை பற்றி பிரபல இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். சிவாஜி கணேசன் மது அருந்திவிட்டு நடித்துகாட்டியதாக சிதம்பர நினைவுகள் புத்தகத்தில் பாலசந்திரன் கள்ளிக்காடு குறிப்பிட்டிருப்பார். இது அப்படியே பாடநூலில் இணைக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என சீனு ராமசாமி கூறியுள்ளார். பாலசந்திரன்சுள்ளிக்காடு எழுதிய சிதம்பரநினைவுகள் புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சந்திப்பு பற்றிய கட்டுரையில் சிவாஜி அவர்கள் மதுஅருந்தி விட்டு தங்களிடம் நடித்துக்காடியதாக எழுதியிருப்பார்.இது அப்படியே பாடநூலில் இணைக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். — Seenu Ramasamy (@seenuramasamy) June 7, 2019 ...