"உன் பேர் சொல்ல ஆசைதான்" - மோனிகா கேஸ்டலினோ - என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்..? பாருங்க..!
கே.எஸ்.ரவிகுமாா் அவா்கள் தளபதி விஜய் அவா்களுடன் கைகோா்த்த முதல் திரைப்படம் மின்சார கண்ணா. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை இதுவே இவர்கள் கூட்டணியின் கடைசி படமுமாக அமைந்து விட்டது. சரி வாங்க மேட்டருக்கு போலாம். இந்த படத்தில் தளபதி விஜய் அவா்களுக்கு ஜோடியாக நடிக்க இயக்குநா் கே.எஸ்.ரவிகுமார் முதலில் அணுகியது நடிகை சிம்ரனை தான். ஆனால், இப்படத்தில் நடிகை குஷ்புவிற்கு உள்ள முக்கியத்துவம் எனக்கு இல்லை அதனால் ப்ளீஸ் சார் என்று கூறி மறுத்து விட்டதாக கேள்வி. பின்னா் இந்த ஹீரோயின் கதாபாத்திரம் போஜ்புரி மொழி நடிகையான மோனிகா கேஸ்டலினோ என்ற புதுமுத்திற்கு கிடைத்தது. பக்கத்துக்கு வீட்டு பெண் போல கலையாக இருந்தார் மோனிகா. ஒரு பாடலில் பிரம்மனை கஞ்சன் என்றும் வள்ளல் என்றும் பொத்தாம் பொதுவாக வர்ணித்திருப்பார் கவிஞர் வைரமுத்து. ஆனால், நம்ம கவிஞர் நா.முத்துக்குமார் கஞ்சனும் இல்லை, வள்ளலும் இல்லை என வைரமுத்துவின் வரிகளுக்கு பளார் விடும் படி “பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னைப் படைத்ததாலே” என்ற வரிகளை படத்தின் நாயகியை நோக்கி எழுதினார். அந்த நாயகி மோனிகா ஆகிவிட்ட...