அடி வாங்கிய விடாமுயற்சி.. நொந்து போன அஜித் ரசிகர் பதிவு.. ஜீ.வி.பிரகாஷ் கொடுத்த பதிலை பாருங்க..
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் "குட் பேட் அக்லி" திரைப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளது. "விடாமுயற்சி" திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், இந்த படத்தின் இசைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதலில் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், புஷ்பா 2 படத்தில் தயாரிப்பாளருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக, "குட் பேட் அக்லி" படத்திலிருந்தும் அவர் விலக்கப்பட்டார். பின்னர், ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜி.வி. பிரகாஷ் குமார் ஏற்கனவே "குட் பேட் அக்லி" படத்திற்காக சில பாடல்களை உருவாக்கி கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் ஜி.வி. பி...