உள்ளே வந்த மாற்றுக்கட்சி MLA-க்கள்! எந்த நிபந்தனையுமின்றி ஆதரவு! யார் யார் என பாருங்க!
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 108இலிருந்து 113ஆக உயர்ந்துள்ளது. தவெக வட்டாரங்கள் தெரிவித்தபடி, இந்த ஆதரவு எந்தவித நிபந்தனையுமின்றி வழங்கப்படுகிறது. 2029 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40 பாராளுமன்ற உறுப்பினர்களை தவெகவின் மூலம் காங்கிரஸுக்கு பெற்றுத் தரும் அடிப்படையில், ஆட்சியில் பங்கு அல்லது அமைச்சர் பதவிகள் கோராமல் காங்கிரஸ் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்யுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 107 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களைப் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட 9 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ...