Posts

Showing posts with the label Karur police

சீரியல் நடிகை ராணியிடம் லட்சக்கணக்கில் நகை பணம் இழந்த கரூர் தொழில் அதிபர்! சீரியலை மிஞ்சும் உண்மை கதை!

Image
சென்னை : தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சீரியல் நடிகை ராணி, மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். கரூர் ஹோட்டல் அதிபர் தினேஷ் ராஜிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம், BMW கார், 5 சவரன் நகை ஆகியவற்றை ஏமாற்றி வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் நடிகை ராணி, அவரது கணவர் பாலமுருகன் பாலாஜி மற்றும் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது கரூர் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை ராணி, ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். திருமணத்துக்குப் பின் தெலுங்கு சீரியல்கள் மூலம் மீண்டும் நுழைந்து, தமிழில் 'சிகரம்', 'அலைகள்', 'சொந்தம்', 'அத்திப்பூக்கள்', 'வள்ளி' உள்ளிட்ட பல தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். கரூர் மாநகரில் ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ராஜ், தனது மனைவியுடனான குடும்பப் பிரச்சனையைத் தீர்க்க சாதி அமைப்புத் தலைவரின் உதவியை நாடினார். அப்போது நடந்த பஞ்சாயத்து பேச்சுவார்த்தையில் நடிகை ராணியும் அவரது கணவரும் பங்கேற்றனர். இதன்மூலம் தினேஷ் ராஜுக்...

BMW கார், லட்ச லட்சமாய் பணம், லாட்ஜ் உரிமையாளரிடம் சீரியல் நடிகை ராணி காட்டிய வேலை.. போலீஸில் புகார்.. என்ன நடந்தது..?

Image
கரூர்: பிரபல சின்னத்திரை நடிகை ராணி, அவரது கணவர் பாலாஜி (பாலமுருகன்) மற்றும் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் மோசடி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ விவரம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் ராஜ், கரூர் கோவை சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். தொழில் ரீதியான பணத் தேவைக்காக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பாலாஜி, தனது நண்பர்கள் மூலம் கரூரில் உள்ள வடிவேலு மற்றும் ஆறுமுகம் ஆகியோரை அறிமுகப்படுத்தி, ஒப்பந்த அடிப்படையில் 10 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார். பின்னர், தினேஷ் ராஜ் தனது பொருளாதார பிரச்சினையை கூறிய போது, பாலாஜி இரண்டு நாட்களில் சென்னை சென்று தீர்வு காண்பதாக உறுதியளித்தார். அப்போது, தினேஷ் ராஜுக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான BMW கார் மற்றும் அவரது மகளுக்கான 5 சவரன் தங்க நகையையும் திரும்பத் தருவதாகக் கூறி பெற்றுக்கொண்டார். இதற்கு பாலாஜியுடன் வந்த புருஷோத்தமன் நம்பிக்கை அ...

‘மேடம்... இது ஆக்‌ஷன் மேடம்” கோயில் வாசலில் பிச்சை எடுத்த போலீஸ்காரர்.. இப்படி ஒரு குற்றம் செய்தவரா..?

Image
கரூர், நவம்பர் 25, 2025 : கரூர் மாவட்டத்தில் போலீஸ் காவலராக பணியாற்றியவர், பாலியல் அத்துமீறல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, கோவில் வாசலில் பிச்சை எடுத்து கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், ஒரு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் மற்றும் போலீஸ் துறையின் நடவடிக்கைகள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டம், சனப்பிரட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சின்னாண்டாம் கோவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் நட்பாகப் பழகி வந்தார். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு, இருவரும் சனப்பிரட்டி அருகிலுள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கரூர் பசுபதிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிய வெங்கமேட்டைச் சேர்ந்த 35 வயது பிரபாகரன், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். பிரபாகரன், தனது நண்பரும் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவருமான கௌதமனை பைக்கில் பின்னால் அமர வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் தொழில்பேட்டை பகுதியில் செல்லும் போது, இளம்பெண்ணும் இளைஞரும் அ...