Posts

Showing posts with the label Actor Bala Singh

பிரபல நடிகர் பாலசிங் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி..!

Image
மேடை நாடகங்களில் நடிகராக வலம் வந்த பாலாசிங், நாசர் இயக்கத்தில் அவதாரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார் பாலாசிங்.  புதுப்பேட்டை படத்தில் தாதாவாக மிரட்டியிருந்த பாலாசிங் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என் ஜிகே படத்திலும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த இவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.  இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்ணார் அவரது ஆன்மா சாந்தியடைய சினிஃபிளிக்ஸ் குழு மற்றும் வாசகர்கள் சார்பாக இறைவனை பிரத்திகிறோம்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் NGK - போட்டு உடைத்த முன்னணி நடிகர்..!

Image
வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனர் செல்வராகவன். மிகவும் அட்வான்ஸாக இவரது திரைப்படங்கள் இருப்பதால் அவை ரசிகர்களிடையே சென்று ரீச் ஆவதற்கு சில காலம் எடுக்கும். புதுப்பேட்டை படத்தை தற்போது தான் அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் தான் NGK. சூர்யாவின் நடிப்பில் வெளியாகியிருந்த இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலா சிங் நடித்திருந்தார். படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பாலா சிங் கூறுகையில், இப்படத்தில் நடித்த போது புதுப்பேட்டையில் தெரிந்த பாலா இந்த படத்தில் எந்த இடத்திலும் தெரிய கூடாது, புதுசாக தெரியணும் என்று சொன்னார், செல்வராகவன். அவர் என்ன சொல்லி கொடுத்தாரோ, அதை மட்டும் செய்தேன். புதுப்பேட்டை-2 மாதிரிதான் இந்தப் படம் என்று சொன்னார், அப்படித்தான் NGK வந்திருக்கு. படத்தில் என் கெட்டப் எம்.ஜி.ஆர் சாயல் இருக்கணும் என செல்வராகவன் சொல்லியிருந்தார். அதனால்தான், அதேமாதிரி கண்ணாடி, தொப்பி எல்லாம் போட்டுக்கிட்டேன் என்கிறார், பாலா சிங்.     Summary in English ...