Posts

Showing posts with the label Meena

என் இரண்டாவது கணவர் இவர் தான்? முடிவை அறிவித்த நடிகை மீனா!

Image
சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான மீனா, தனது இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கணவர் வித்யாசாகரின் மறைவுக்குப் பிறகு, தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் அவர், இத்தகைய வதந்திகளால் தான் மற்றும் தனது குடும்பத்தினர் கடுமையான மன வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். "இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை" என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மீனாவின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை. 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், 'வீரா', 'எஜமான்', 'முத்து' போன்ற படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இதயங்களை வென்றார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இன்றும் அவருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, முன்னணி கதாநாயகியாக உயர்ந்த மீனா, திரைத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். தனிப்பட்ட வாழ்க்கையில், 2009-ம...

‘நடிகை மீனா இரண்டாம் திருமணம்’ பிரபல அரசியல் வாதியை மணக்கிறார்..? யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
சென்னை, அக்டோபர் 29, 2025: தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழும் 49 வயது மீனாவின் வாழ்க்கையைச் சுற்றி மீண்டும் ஒரு பரபரப்பான வதந்தி பரவுகிறது. அக்கட தேசத்து ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, மீனா 45 வயது அமைச்சர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அமைச்சர் மகன் தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்தவர் எனவும், அவருக்கு 15 வயது மகள் ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வதந்திகளுக்கு மத்தியில், மீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் ஊடக கவனத்தின் மையமாக மாறியுள்ளது. 2009ஆம் ஆண்டு வணிகர் வித்யாசாகரைத் திருமணம் செய்த மீனா, 2022இல் அவரது திடீர் மரணத்தால் பெரும் துயரத்தை அனுபவித்தார். அவரது மகள் நைனிகா (13 வயது) மீதான அன்பும் கவனமும் மட்டுமே தனது வாழ்க்கையின் மையமாக இருப்பதாக மீனா அறிவித்திருந்தார். இரண்டாம் திருமணம் குறித்து எந்த யோசனையும் இல்லை என அவர் தெளிவாகக் கூறியிருந்தாலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் இத்தகைய வதந்திகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன. வதந்தியின் விவரங்கள்: யார் இந்த 'அமைச்சர் மகன்'? அக்கட தேச ஊடகங்களின...

சௌந்தர்யா விமான விபத்து.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை மீனா.. மிரண்டு கிடக்கும் இண்டர்நெட்!

Image
2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை சௌந்தர்யாவின் உயிரைப் பறித்த ஹெலிகாப்டர் விபத்து திரையுலகையே உலுக்கிய சோகமான நிகழ்வாகும். இந்த விபத்து குறித்து சமீபத்தில் நடிகை மீனா பகிர்ந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் தானும் பயணிக்க வேண்டியிருந்ததாகவும், ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அந்த பயணத்தைத் தவிர்த்ததாகவும் மீனா தெரிவித்துள்ளார். சௌந்தர்யா, தெலுங்கு திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு பயணிக்கவிருந்தார். அப்போது, அவருடன் மீனாவும் அந்த பயணத்தில் இணைந்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத சில காரணங்களால் மீனா அந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. இதனால், அவர் உயிர் தப்பிய நிலையில், சௌந்தர்யா உட்பட ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் அனைவரும் மரணமடைந்தனர். இந்த விபத்து, பெங்களூரு அருகே கர்நாடகாவின் ஜக்கனஹள்ளி பகுதியில் நிகழ்ந்தது, மேலும் இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. மீனாவின் இந்த வெளிப்பாடு, அவரது ரசிகர்களுக்கு மட்டுமல...

‘அதை கடைசியில பண்ணா தான் கிக்கு..’ A to Z ஃபுல் சர்வீஸ் இருக்கு.. மசாஜ் சென்டர் பெண்ணின் காது கூசும் ஆடியோ..

Image
மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் ஸ்பா உரிமையாளர் உட்பட மூன்று பெண்கள் கைது. A to Z நமக்கு ஃபுல் சர்வீஸ் வேண்டும் என வாடிக்கையாளரும் பெண்களை பக்காவாக அனுப்பி வைத்து அழகு பார்க்கும் மற்றொரு ஸ்பா உரிமையாளரும் பேசிய ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.  திருப்பூர் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  அந்த தகவலின் அடிப்படையில் மாநகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார் பிரவீன் குமார் அபினவ் இதை அடுத்து ஓடக்காடு பகுதியில் உள்ள கிங் ஆயுர்வேதா பியூட்டி சலூன் மற்றும் புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள பெயரரே இல்லாத ஒரு ஸ்பா உட்பட 3 ஸ்பாக்களில் போலீசார் சத்தம் இன்றி உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.  மேலும், திருப்பூரின் முக்கிய பகுதியில் செயல்பட்டு வந்த பியூட்டி பார்க் என்ற மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் ஜெகஜோதியாக நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து சென்ற எழுத்து முடிய போலீசார் அங்கிருந்த இரண...

‘சும்மா தான் போயிட்டு வந்தேன்.. குழந்தை வந்திருச்சி..’ விசாரணையில் வெளியான குலைநடுங்கும் தகவல்..

Image
நம்முடைய தமிழகம் தளத்தில் நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்தும் அதன் பின்னால் இருக்கக்கூடிய திடுக்கிடும் பின்னணிகள் குறித்தும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் கொண்ட குற்ற சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு சிறு கிராமத்தில், பக்கத்து வீட்டு இளைஞர்களான மீனாவுக்கும் சீனிவாசனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அண்டை வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், பரஸ்பர புரிதலுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பின், சீனிவாசன் மீனாவுடன் சினிமாவுக்கு செல்வது, கோயிலுக்கு செல்வது என நேரத்தை செலவிட்டார். ஆனால், திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தலைதூக்கியது.வாக்குவாதம் கைகலப்பாக மாற, திருமணம் நின்றுபோனது. தீபாவளி காலத்தில் நடந்த இந்தச் சம்பவம் காவல் நிலையம் வரை சென்றது. இரு தரப்பும் புகார் அளித்து, "இனி பிரச்சினை செய்ய மாட்டோம்" என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து வீடு திரும்பினர். இதன்பின், சீனிவாசன் மீனாவுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்தார். மீனாவும் இதை உறுதிப்படுத்தினார். 13 மாதங்களுக்குப் பின் வந...

முரளிக்கு அந்த வீக்னெஸ் அதிகம்.. மீனா கூட நடிக்கும் போது.. எவ்ளோ சொல்லியும் கேக்கல..

Image
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான வி. சேகர், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், மறைந்த நடிகர் முரளி குறித்து பகிரங்கமாக பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 2002ஆம் ஆண்டு வெளியான நம்ம வீட்டு கல்யாணம் திரைப்படத்தில் முரளி கதாநாயகனாக நடிக்க, மீனா மற்றும் விந்தியா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்கியவர் வி. சேகர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, முரளியின் “மற்றொரு பக்கம்” தனக்கு தெரியவந்ததாகவும், அவரது சில நடவடிக்கைகள் படத்தை பாதித்ததாகவும் வி. சேகர் குறிப்பிட்டார்.வி. சேகர் கூறியதாவது: “படப்பிடிப்பின்போது, மது அருந்துவது, பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது போன்றவை தவறு. இதை தனிப்பட்ட முறையில் செய்யுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தியும், முரளி கேட்கவில்லை. உதாரணமாக, மது அருந்துவது உங்களுக்கு தனிப்பட்ட மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் ஒரு கார் ஓட்டுநராக, நான்கு பயணிகளுடன் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அது உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிக்கும். அதேபோல, ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது, ஒரு நடிகர் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால்...

என்ன கன்றாவி இது? சுடிதார் மேல் உள்ளாடை.. சீரியல் நடிகை ஹேமரா ராஜ்குமார் கிளாமர் போஸ்..!

Image
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹேமா ராஜ்குமார், மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர்.  பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களிலும், ரஜினியின் பாட்ஷா, சரத்குமாரின் சூர்யவம்சம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹேமா, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் அழகு குறிப்புகள், வாழ்க்கை முறை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.  சமீபத்தில், உள்ளாடை (ப்ரா) வெளியே தெரிவது போன்ற வடிவமைப்பில் சுடிதார் அணிந்து ஹேமா ராஜ்குமார் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இந்த புதுமையான உடை வடிவமைப்பு, சமீப காலமாக சில நடிகைகள் ஜாக்கெட்டுகளில் இதேபோன்ற வடிவமைப்பை பயன்படுத்துவதைப் போலவே, சுடிதாரிலும் இப்போது பிரபலமாகி வருகிறது.  இந்த புகைப்படங்களில் ஹேமா கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  எனினும், இந்த...

அமைச்சருடன் தொடர்பு? தீயாய் பரவும் வீடியோக்கள்! மீனா கூறிய பதில்! பத்தி எரியும் இண்டர்நெட்!

Image
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் மீனா, மத்திய இணையமைச்சர் எல். முருகனுடன் தொடர்பில் இருப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சமூக ஊடகத்தில் பகிர்ந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இந்த வதந்தி, பொதுவெளியில் பரவலான விவாதங்களை உருவாக்கியது. திருச்சி சூர்யா, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதாக அறியப்படுபவர்.  இதனால், மீனாவுக்கு ஆதரவாக பேசும் ரசிகர்கள், “அவரது பதிவுகளுக்கு நம்பகத்தன்மை இல்லை, இவை வெறும் வதந்திகள்,” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு, இந்த வதந்திகளுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார்.  அவர் தனது பதிவில், “என் அம்மா சொன்னார், ஒரு பெண்ணைப் பற்றி தவறான தகவல் வருகிறது என்றால், அதை உடனடியாக நம்பாதீர்கள். ஏனென்றால், அவளை வெல்ல முடியாதவர்கள், அவளை தோற்கடிக்க இத்தகைய வதந்திகளை ஆயுதமாக பயன்படுத்தலாம்.  இப்போது நான் அதை உணர்ந்திருக்கிறேன்,” என்று எழுதியுள்ளார். இந்த பதிவு, தன்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு...

பழக்கம் இல்லன்னு சொல்லியும் என்னை பாடாய் படுத்துனாங்க.. முன்னணி நடிகர்கள் குறித்து மீனா!

Image
தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தன்னுடைய இயல்பான பேச்சு மற்றும் அன்பான புன்னகையால் ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மலையாள சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார். அவர்களை "சார்" என்று அழைத்து ஏற்பட்ட நகைச்சுவையான தருணங்களை நினைவு கூர்ந்து சிரித்தபடி பேசியது ரசிகர்களிடையே புன்னகையை வரவழைத்துள்ளது.  மலையாள திரையுலகில் அறிமுகமானபோது, மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரை மரியாதையாக "சார்" என்று அழைத்து வந்தார் மீனா. ஆனால், அவர்கள் இருவரும், "எங்களை சார் என்று அழைக்க வேண்டாம், மம்மூக்கா, லாலேட்டா என்று அழைத்தால் போதும்" என்று அன்போடு கூறினர்.  இருப்பினும், மீனாவுக்கு இது பழக்கமில்லாத ஒன்றாக இருந்தது. "நான் எப்போதும் அனைவரையும் சார் என்று தான் அழைப்பேன்" என்று பலமுறை விளக்கிய போதிலும், பழக்க தோஷத்தில் சில நேரங்களில் "சார்" என்றே அழைத்து வ...