Posts

Showing posts with the label 2008 article

18வருடம் முன்பு வந்த ஜூனியர் விகடன் கட்டுரை! இவர் யாரென்று தெரிகிறதா? குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!

Image
சென்னை : நடிகர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான வெற்றிவேலுக்கு அரசு வேலை வழங்கிய சம்பவம் பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு (20.02.2008) ஜூனியர் விகடன் இதழில் வெளியான ஒரு விரிவான கட்டுரை இப்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது. அந்த கட்டுரையில் வெற்றிவேல் மீது அவரது இரண்டாவது மனைவி எனக் கூறும் சுமதிஸ்ரீ என்பவர் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். கொலை, கடத்தல், மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. சுமதிஸ்ரீயின் அதிரடி குற்றச்சாட்டுகள் ஜூனியர் விகடன் நிருபர்களைச் சந்தித்த சுமதிஸ்ரீ, “அந்த வெற்றிவேலோடு அஞ்சு வருஷம் குடும்பம் நடத்தின அனுபவத்தில் சொல்றேன். அவன் பொம்பளைப் பித்து பிடிச்சவன். மனசுக்குப் பிடிச்சிருக்கிற வரையில் பொம்பளைக்காக எந்தக் காரியத்தையும் பண்ணத் துணிஞ்சவன்” என்று தொடங்கினார். அவர் கூறிய பின்னணி இதுதான்: வெற்றிவேலின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள அவல்பூந்துறை. அவர் பிரின்டிங் பிரஸ் தொழில் செய்து வந்தார். முதல் மனைவி ஆனந்தியை கொலை செய்ததாகவும், அந்த கொலையில் அவரது தங்கை ரா...