Posts

Showing posts with the label Mohanraj

நான் இல்ல, கார்த்திக்கின் புது பொண்டாட்டி தான்.. கோவை சிறுமியின் தாய் கொடுத்த பகீர் தகவல்..!

Image
கோவை : சூலூர் அருகே பல்லாபாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், சிறுமியின் தாயார் புதிய பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். கார்த்திக் என்பவரின் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணும் இந்தக் கொலையில் உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், அவரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கையில், கடந்த மே 21ஆம் தேதி மாலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை (4ஆம் வகுப்பு மாணவி) அருகில் வசித்து வந்த 33 வயதான கார்த்திக் (நாகப்பட்டினம் மாவட்டம் பூர்வீகம்) சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரது நண்பர் மோகன்ராஜ் (30) உதவியுடன் தென்னந்தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்து, கண்ணம்பாளையம் குளக்கரை முட்புதரில் உடலை வீசியுள்ளனர். சிறுமியை காணவில்லை என குடும்பத்தினர் 100 அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீசார் 5 தனிப்படைகள்...

இன்சுரன்ஸ் பணம் 3 கோடிக்காக, தந்தையை பாம்பு ஏவி தீர்த்து கட்டிய மகன்கள்.. ஆனால், உண்மை என்ன தெரியுமா..?

Image
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் இ.பி. கணேசன் (56) என்பவர் கடந்த அக்டோபர் 22-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது மகன் மோகன்ராஜ் பொதட்டூர்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கணேசன் பெயரில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு உயிர் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தது தெரியவந்தது. குடும்பத்தில் மொத்தம் 11 காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தன. இவை அவரது வருமானத்திற்கு ஏற்றவை அல்ல என்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்கிடம் புகார் அளித்தன. இதன்பேரில் டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. செல்போன் தகவல்கள், நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆராய்ந்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கணேசனின் மகன்கள் மோகன்ராஜ் (26, சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்) மற்றும் ஹரிஹரன் (27, வாகன வாடகை தொழில்) ஆகியோர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை கொலை செய்ய தி...

சென்னை குடும்பத்தாருக்கு ரயிலில் நேர்ந்த பரிதாபம்! அட்டூழியம் செய்த போலீஸ்? Wanted ஆக சிக்கியது எப்படி?

Image
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண்: 20605) கடந்த ஆகஸ்ட் 30 அன்று பயணித்த சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மோகன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், ரயில்வே ஊழியர்கள் மற்றும் காவலரின் முறைகேடான நடவடிக்கைகளால் அவமதிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். மோகன்ராஜ், தனது தாய், அக்கா, மாமா மற்றும் குழந்தையுடன் ஆறு பேருக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுடன் பயணித்தார். ஆனால், அவரது தந்தை உடல்நலக் காரணங்களால் பயணிக்கவில்லை. இதனால், ஆறு டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட் பயன்படுத்தப்படவில்லை. ரயிலில் வந்த டிக்கெட் பரிசோதகர் (டிடி), பயன்படுத்தப்படாத டிக்கெட்டை மற்றவர்களுக்கு ஒதுக்குவதாகக் கூறியதை மோகன்ராஜ் எதிர்த்து, அந்த இடத்தை தனது குடும்பத்தினர் (பெண்கள் மற்றும் குழந்தைகள்) பயன்படுத்த வேண்டும் என வாதிட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, டிக்கெட் பரிசோதகர் சிதம்பரம் ரயில் நிலையத்தில் மோகன்ராஜ் மற்றும் அவரது மாமா மீது சட்டவிரோதமாக பயணித்ததாக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவல் நிலையத்தில் புகார் அளித்தார...

ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. உண்மை காரணத்தை மூடி மறைக்க படக்குழு.. குலை நடுங்க வைக்கும் தகவல்!

Image
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இப்படத்தில் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், அசோக் செல்வன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நீலம் புரொடக்சன் தயாரிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.  இந்நிலையில், விழுந்தமாவடி கிராமத்தில் கடந்த ஜூலை 10 முதல் நடைபெற்று வந்த படப்பிடிப்பில், கார் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜின் மகனான மோகன்ராஜ், ஸ்டண்ட் யூனியனின் முக்கிய நிர்வாகியாகவும், திறமையான சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார்.  படப்பிடிப்பின்போது, கார் பறக்கும் ஸ்டண்ட் காட்சியில் மோகன்ராஜ் காரை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து ...