காதலனை வீட்டுக்கு அழைத்து படுக்கையில் விருந்து வைத்த மனைவி.. நேரில் பார்த்த கணவன் ஓட ஓட வெட்டி கொலை..
சென்னை அசோக் நகர் பகுதியில், ஆன்லைன் உணவு விநியோக ஊழியரான கலையரசன் (23) என்ற இளைஞர், தனது மனைவியின் சகோதரர்களால் நடு ரோட்டில் விரட்டி வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர கொலைக்கு, கலையரசனின் மனைவி தமிழரசியின் கள்ள காதல் மற்றும் அதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகளே காரணம் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கலையரசன், அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர். பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்தின் நலனுக்காக, கலையரசன் நேரம் காலம் பாராமல், உணவு உண்ணாமல் தெருத்தெருவாக பைக்கில் சுற்றி உழைத்து, மனைவி மற்றும் மகனுக்கு தன்னால் முடிந்தவற்றை செய்து வந்தார். ஆனால், தமிழரசியின் எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால், தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தச் சூழ...