உன் புருஷன் வரமாட்டான்.. நீ வா.. லாட்ஜுக்குள் இளம் பெண்ணை அடைத்து.. 8 மணி நேரம்.. காது கூடும் கொடூரம்..
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சாய்பாபா நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் பிரிதிவிராஜ் வர்மா, தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் கந்துவட்டி கும்பலால் கடத்தப்பட்டு, அரக்கோணம் வி.எம்.ஆர். லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தமிழ்ச்செல்வன், அப்பு என்கிற தீபக் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஜூலை 5ஆம் தேதி, குடும்பத் தேவைக்காக பிரிதிவிராஜ், ராணிப்பேட்டை மாவட்டம் மரக்கோணத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனிடம் ₹50,000 வட்டிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ₹10,000 வட்டியாகவும், ₹3,500 சாட்சி கையெழுத்து மற்றும் புரோக்கர் கமிஷனாகவும் பிடித்து, ₹36,500 மட்டுமே பிரிதிவிராஜுக்கு வழங்கப்பட்டது. தினமும் ₹600 வீதம் 85 நாட்களுக்கு பணம் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, பிரிதிவிராஜ் ₹24,000 வரை செலுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக ஓட்டுநராகப் பணிபுரியும் பிரிதிவிராஜுக்கு வேலை கிடைக்காததால், தவணை செலுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், தனது கூட...