Posts

Showing posts with the label digital forensics

“மலையிலிருந்து தள்ளுவதற்கு முன் பேசிய ரகசிய உரையாடல்..” நாட்டையே உலுக்கிய கொலை வழக்கின் புதிய ஆடியோ..

Image
புனே ரியல் எஸ்டேட் அதிபர் 25 வயது கேத்தன் அகர்வால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. உயிரிழப்பு நிகழ்வுக்கு 34 நிமிடங்களுக்கு முன்பு, முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட 19 வயது சியா கோயல் தனது காதலன் சேத்தன் சவுதரியுடன் ரகசிய செல்போன் உரையாடல் நடத்தியதாக சிடிஆர் (கால் டீடைல் ரெக்கார்டு) ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த உரையாடல் சதி திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் வாக்காக காவல்துறையால் கருதப்படுகிறது. சியா கோயல் தனது துல்லியமான இருப்பிடமான லோகட் கோட்டையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை சேத்தன் சவுதரிக்கு தெரிவித்ததாகவும், அந்தப் பகுதியில் வேறு சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரகசிய அழைப்பு மூலம் இருவரும் திட்டத்தை இறுதி செய்ததாக விசாரணை அதிகாரிகள் பார்க்கின்றனர். ஒரு கோடி ரூபாய் பணம் தொடர்பான தகவல் விசாரணையில் மற்றொரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. கேத்தன் அகர்வாலிடமிருந்தே ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கி, அதை சியா கோயல் தனது காதலன் சேத்தன் சவுதரியிடம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் சத...