பெற்ற தாயை ஆற்றில் வீச வந்த மகள்.. கடைசியாக தாய் சொன்ன வார்த்தை..
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் உள்ள காவிரி ஆற்றின் லயன் கரையில் நடந்த மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியிலும், கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ளது. வயதான தனது தாயை பராமரிக்க முடியாமல், அவரை தொந்தரவாக கருதி, பெற்ற மகளே ஆற்றில் தள்ள முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. நிகழ்வு குறித்த விவரங்கள் பின்வருமாறு: ஆடுதுறையைச் சேர்ந்த ஒரு வயதான பெண்மணி, தனது மகளால் ஆற்றில் தள்ளப்பட முயற்சிக்கப்பட்டார். அந்தத் தாயின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இதனைத் தொடர்ந்து, மகளின் செயலுக்கு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவளை கடுமையாக விமர்சித்து, தாக்க முயன்றனர். “நீ எல்லாம் ஒரு பொம்பளையா? மனசாட்சி இல்லையா? உங்க அம்மாவை நாங்க பார்த்துக்கிறோம், முதலில் உன்னை போலீசில் ஒப்படைக்கிறோம்,” என ஒருவர் கோபத்துடன் கூறினார். மற்றொருவர், “ஆசிரமத்துக்கு வர வேண்டாம், உனக்கு பாவம்தான், இதுல வளர்த்தவங்களை ஆற்றில் தள்ளுறியே!” என கண்டித்தார்.ஆனால், இந்தக் காட்சியில் மனதை உருக்கிய தருணம், தரையில் கிடந்த அந்த வயதான தாயின் செயல். தனது மகளை பொதுமக்கள் தாக்க முயல்வதைப்...