கணவரின் கண் எதிரேலேயே.. பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. தமிழ்நாட்டில் நெஞ்சை கலங்க வைக்கும் பகீர் சம்பவம்..
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி, போதிய வசதிகள் இல்லை எனக் கூறி வேலையை விட்டு விலக முடிவு செய்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில், கணவரின் கண் எதிரே அந்தப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் மற்றும் அவரது கணவர், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் வசிக்கும் முகமது மக்பூல் ஹுசைன் என்பவரால் இடைத்தரகராக ஏற்பாடு செய்யப்பட்டு, அரசர்குளம் பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். இடைத்தரகர் முகமது மக்பூல் ஹுசைன், நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு இவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஆனால், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் போதுமானதாக இல்லாததாலும் தம்பதி வேலையை விட்டு விலக முடிவு செய்தனர். கேரளாவில் வேலை தேடிச் செல்ல திட்டமிட்ட அவர்கள், டிசம்பர் 15-ம் தேதி அரசர்குளத்தில...