உடலுறவுக்கு முன் வினோத பழக்கம்! இளம்பெண்ணின் விபரீத ஆசையால் பிரிந்த உயிர்! காதலன் செய்த கொடூரம்!
இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய காதல்... 6 மாத லிவிங் டுகெதர் வாழ்க்கை... திருமண வாக்குவாதத்தில் சோக முடிவு ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு வழக்கறிஞர் ஒருவருக்கு திடீரென ஒரு போன் அழைப்பு வந்தது. போனை எடுத்து பேசிய அவர், மறுமுனையில் இருந்து வந்த அழுகை மற்றும் வார்த்தைகளால் அதிர்ச்சியில் உறைந்து போனார். “சார்... நான் அவளை உயிரிழக்கச் செய்துவிட்டேன்...” என்று அழுதபடி கூறினார் அந்த இளைஞன். போனை துண்டித்த வழக்கறிஞர் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தார். அங்கு சென்று தான் கேட்ட தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக அந்த இளைஞன் குறிப்பிட்ட வீட்டுக்கு புறப்பட்டனர். வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, அங்கு 20 வயது இளம்பெண்ணின் உடல் தரையில் கிடந்தது. உடனடியாக இடத்தை சீல் வைத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் அந்த இளைஞனை கைது செய்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சக்லேஷ்பூரைச் சேர்ந்த...