இணையத்தில் தீயாய் பரவும் BYE BYE ஸ்டாலின் பாடல்..! பரபரப்பை கிளப்பிய வரிகள்!
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அதிமுக, தற்போது ‘Bye Bye Stalin’ என்ற பாடலை வெளியிட்டு, சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பிரச்சார உத்தியாக பயன்படுத்தப்படுகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த பாடல், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை பெற்று வருகிறது.‘Bye Bye Stalin’ பாடல், திமுக அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடல் வரிகளில், “நான்காண்டு ஆட்சி, தமிழகத்தின் வீழ்ச்சி, Fall of Sun, Bye Bye Bye... #ByeByeStalin” போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன, இது திமுகவின் ‘உதய சூரியன்’ சின்னத்தை குறியீடாக விமர்சிக்கிறது. இந்த பாடல், அதிமுகவின் ஐடி பிரிவால் (AIADMK IT Wing) ஜூலை 9, 2025 அன்று வெளியிடப்பட்டு, X தளத்தில் #ByeByeStalin என்ற ஹேஷ்டேகுடன் ட்ரெண்டாகி வருகிறது. “2026 தேர்தலுக்கான ஒரே அஜெண்டா - Bye Bye Stalin,” என்று அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வர...