தர்பூசணி காரணமல்ல! பிரியாணி சாப்பிட்ட பின் நடந்தது இது தான்! பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் பகீர் தகவல்!
மும்பை, ஏப்ரல் 29, 2026: தென் மும்பையின் பைதோனி (பெண்டி பஜார்) பகுதியில் உள்ள மொகுல் பில்டிங்கில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் – தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் – உணவு நச்சுத்தன்மை காரணமாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், “பிரியாணி சாப்பிட்டுவிட்டு பழம் சாப்பிட்டால் ஆபத்தா?” என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் பரவியுள்ளது. சம்பவம் என்ன நடந்தது? கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25) இரவு சுமார் 10.30 மணியளவில், அப்துல்லா அப்துல் காதர் தொகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35), மகள்கள் ஆயிஷா (16) மற்றும் ஜைனப் (13) ஆகியோர் தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வீட்டில் சிக்கன் பிரியாணி உணவு அருந்தினர். உணவு முடிந்ததும் உறவினர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்களுக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. இரவு சுமார் 1 மணியளவில், அப்துல்லா குடும்பத்தினர் நான்கு பேரும் மட்டும் தண்ணீர் பழமான தர்பூசணியை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு அவர்கள் உறங்கச் சென்றனர். அதி...