மாணவனை வீட்டில் விட ஆள் அனுப்பிய ஆசிரியை.. இரவோடு இரவாக கொடூர முடிவு.. கல்லூரியில் அறைக்குள் நடந்த அசிங்கம்..
சென்னை, நவம்பர் 9: கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் வாசுதேவன், தனியார் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வின்போது மொபைல் போன் பிடிக்கப்பட்டதாகக் கூறி தனி அறையில் மூன்று மணி நேரம் அடைக்கப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோடம்பக்கம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமாபுரத்தில் செயல்படும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பிசிஐ படித்து வந்த வாசுதேவன், கடந்த 6ஆம் தேதி ஜாவா புரோகிராமிங் செமஸ்டர் தேர்வு எழுதினார். தேர்வரங்கில் அவர் மொபைல் போனைப் பயன்படுத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அவரைத் தனி அறையில் அடைத்து வைத்ததாகவும், இது ஜெயிலில் அடைத்து வைப்பது போன்ற பாவனை என்றும் குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். அக்காலத்தில் வாசுதேவனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்கள் அறிந்ததாகக் கூறி, வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி, அவரது தாய் கீதா...