அதிமுக கூட்டணியில் தவெக! அதிமுகவின் முக்கியப்புள்ளி ஒரே போடு! பரபரப்பு தகவல்கள்!
சென்னை, பிப்ரவரி 20, 2026: தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவதா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் அரசியல் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த இரு சூழல்களிலும் தவெகவின் வெற்றி வாய்ப்புகளை பகுப்பாய்வு செய்வோம். இது தவெகவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக உள்ளது. அதிமுக கூட்டணியில் தவெக? அதிமுக கூட்டணியில் தவெக இணையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினரும்அதிமுக முக்கியப்புள்ளிகளில் ஒருவருமானஓ.எஸ்.மணியன், அதிமுக கூட்டணி வெற்றி பெறவுள்ள கூட்டணி. 2021-ல் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தவறிவிட்டோம் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். தவெக கூட்டணியில் இணையுமா..? என்றால் அதை முடிவு செய்ய வேண்டியது இரு கட்சிகளின் தலைவர்கள் தானே தவிர, நான் கிடையாது. எங்கள் பொதுச்செயலாளர் மாண்புமிகு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்.....