Kingston திரைவிமர்சனம்..! கடலில் மூழ்கிய ஸ்க்ரீன் ப்ளே..!
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் அவரது 25-வது படமாக வெளிவந்துள்ள திரைப்படம் கிங்ஸ்டன். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த திகில் கலந்த பேண்டஸி திரைப்படம், ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை விமர்சனத்தில் பார்ப்போம். திரைக்கதை சுருக்கம்: தூவத்தூர் கடல் கிராமத்தில், மீனவர்கள் கடலுக்குச் சென்றால் உயிருடன் திரும்புவதில்லை. 1982-ல் ஆரம்பித்த இந்த மர்மம் தொடரவே, அரசு மீன்பிடிக்க தடை விதிக்கிறது. கடலில் மூழ்கிய ஆன்மா தான் காரணம் என மக்கள் நம்புகின்றனர். பல வருடங்கள் கழித்து, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) ஒரு படகை வாங்கி கடலுக்குச் செல்ல நினைக்கிறார். இதற்காக தாமஸ் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தாமஸ் போதைப்பொருள் கடத்துவதை தெரிந்து விலகுகிறார். அதன் பின், கடலுக்குச் சென்றால் யாரும் உயிரோடு திரும்ப முடியாது என்று தெரிந்தும், நண்பர்களுடன் கடலுக்குள் துணிந்து செல்கிறார் கிங்ஸ்டன். கடலில் என்ன மர்மம்? கிங்ஸ்டன் உயிரோடு கரை திரும்பினாரா? என்பதே மீதிக்கதை. விமர்சனம்: அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ், வித்தியாசமான கதை...