Posts

Showing posts with the label land plot viewing

கோவை வன்கொடுமை பீதி அடங்கும் முன்பே சிவகங்கை காட்டுப் பகுதியில் காருக்குள் அடித்து கொலஐ செய்யப்பட்ட பெண்..

Image
நவம்பர் 6: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடைபொய்க்கை பகுதியில், நிலம் வாங்குவதற்காக தனியாக சென்ற இளம்பெண் ஒருவர் சொகுசு காருக்குள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் முதற்கட்ட விசாரணையில், பெண் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயன்றதில் ஏற்பட்ட சண்டையே கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது மோப்பநாய் உதவியுடன் விரிவான விசாரணை நடைபெறுகிறது. காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி (35) என்பவரே பலியானவர். தனது தந்தைக்காக நிலம் வாங்கும் நோக்கத்தில், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வீட்டுமனை பகுதியைப் பார்வையிடச் சென்றார் மகேஸ்வரி. இதற்காக தனது சொந்த இன்னோவா சொகுசு காரில் தனியாக வெளியேறினார். சம்பவம் நடந்த இடம், காரைக்குடி-கோட்டையூர் சாலையில் உள்ள ஆவுடைபொய்க்கை - தைலமரக்காட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது முக்கிய சாலையிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில், மக்கள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதி. நிலத்தை காட்டுவதாகக் கூறிய புரோக்கர் (மருவன் என அழைக்கப்...