Posts

Showing posts with the label Naan Kadavul

"ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்" - நான் கடவுள் பட பாடலில் இருக்கும் குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!

Image
தமிழ் சினிமாவில் எவ்வளவோ இயக்குனர்கள் இருக்கிறார்கள். யார் இயக்கிய படத்தையும்.. யார் வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால், இயக்குனர் பாலா படங்களை ரசிக்க ரசிகர்களுக்கு சில தகுதி வேண்டும் என்று கூறுவார்கள். இயக்குனர்களில் ஒரு அரக்கன் என்று அவரை கூறலாம். அவரது, படங்கள் அழ வைத்துவிடும் என்பதை காட்டிலும் ஆழமான கருத்து நிறைந்தவை என்பதால் இவரது படங்களுக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஹீரோவிற்காக படத்தை பார்க்கலாம் என்ற காலங்கள் தாண்டி யாருப்பா! இந்த டைரக்ட்டர்? இவருக்காகவே படம் பார்க்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வர காரணமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவரது படத்தில் வரும் ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் நம்மை ரசிக்க வைக்கும். குறிப்பாக வசனங்கள். அப்படித்தான் ‘நான் கடவுள்’ படத்தில் அகோரியாக நடித்துள்ள ஆர்யாவின் வசனங்களை கவனித்து இருக்கிறீர்களா..? இவர் பேசும் வசனங்கள் சில சிவவாக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்; கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆகியே; மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும் துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே! (தூமை - பெண்கள் மாதவிடாய் கா...