வீட்டு வாடகை கட்டமுடியல, மனைவி மகளை வைத்து தந்தை செய்த அசிங்கம்! குலை நடுங்க வைக்கும் சம்பவம்!
மோர்பி (குஜராத்) : வாடகை பணம் செலுத்த முடியாத காரணத்தால் தனது மனைவியையும் 13 வயது 7 மாத மகளையும் வீட்டு உரிமையாளருக்கு பாலியல் துன்புறுத்த அனுமதித்ததாகக் கூறப்படும் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குஜராத் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சுரேந்திரநகர் பகுதியைச் சேர்ந்த இந்தக் குடும்பம், வாழ்வாதாரத்தைத் தேடி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு மோர்பிக்கு குடிபெயர்ந்தது. அங்கு மாதம் ₹2,000 வாடகையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கடுமையான நிதி நெருக்கடி காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வாடகை செலுத்த முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட 55 வயதான வீட்டு உரிமையாளர், வாடகைக்கு ஈடாக மனைவி மற்றும் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தை இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டதாகவும், அதன்படி வீட்டு உரிமையாளர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்ச...