புடிக்கலனா வெளியே போ.. கொதித்த மோகன் லால்.. குவியும் பாராட்டுகள்..
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி, முன்னணி நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் ஆதிலா மற்றும் நூரா என்ற பெண் ஒரு பாலின தம்பதி போட்டியாளர்களாக பங்கேற்று கவனம் பெற்றுள்ளனர். வைல்டு கார்டு சுற்றில் இணைந்த லக்ஷ்மி மற்றும் மஸ்தானி ஆகியோருடன் நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமடைந்தது.ஆனால், ஆதிலா மற்றும் நூராவுக்கு எதிராக போட்டியாளர் லக்ஷ்மி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. “இவையெல்லாம் நம் சமுதாயத்தில் வரவேற்கப்படக் கூடாது. பிக் பாஸ் போன்ற பொது மேடைகளில் இதை இயல்பாக்க வேண்டியதில்லை. அவர்களை யாரும் வீட்டில் சேர்க்க மாட்டார்கள்,” என்று லக்ஷ்மி பேசியது பெரும் விவாதத்தை உருவாக்கியது. வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்த மோகன்லால், லக்ஷ்மியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “தன்பால் ஈர்ப்பாளர்களாக இருப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை. எல்லோரும் மனிதர்களே, எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும். அவர்களுக்கு இங்கு வாழ உரிமை உள்ளது. உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், இந்த நிகழ்ச்சியில...