Posts

Showing posts with the label Kaveripattinam

போதையில் மணப்பெண்ணை ஆட அழைத்த மாப்பிள்ளை நண்பர்கள்.. நின்று போன திருமணம்.. நிற்கதியான மாப்பிள்ளை..

Image
காவேரிப்பட்டினம், ஆகஸ்ட் 30, 2025: தமிழ் சினிமாவின் பிரபல படம் 'படிக்காதவன்' படத்தில் போலவே, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மது அருந்தி நடனமாடும் கும்பலால் மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் ஆட் சொல்லி அடம் பிடித்த சம்பவம், ஒரு திருமணத்தை முற்றிலும் நிறுத்தி விட்டது. திருநெடுங்கல் மண்டபத்தில் நடைபெற வேண்டிய இந்தத் திருமணம், மணமகனின் குடிகார நண்பர்களின் அநாகரிகமான நடத்தையால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த காந்திகுப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவேரிப்பட்டினம் அருகே பணக முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம், காவேரிப்பட்டினத்தில் உள்ள எஸ்.எம்.எம். கல்யாணி திருமண மண்டபத்தில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள், அதாவது 26ஆம் தேதி மாலை, அந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடியிருந்த நிகழ்வில், இரவு 10 மணி அளவில் மணமகனின் சில நண்பர்கள் மது...