Posts

Showing posts with the label Kallipalayam Dhanapal

6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! 7-வது திருமணத்தில் வசமாக சிக்கிய பகீர் பின்னணி!

Image
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலுள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த தனபால் (வயது 33) என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா (வயது 26) என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகளை மதுரை புரோக்கர் பாலமுருகன் செய்திருந்தார். சந்தியா தரப்பில் அவரது சகோதரி மற்றும் மாமா மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சந்தியா திடீரென காணாமல் போனார். அவரது கைப்பேசி எண் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள், திருமணப் புடவைகள் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தன. சந்தியாவின் உறவினர்கள் என்று சொல்லப்பட்டவர்களின் தொடர்பு எண்களும் செயலிழந்து போயின. இதனால் அதிர்ச்சியடைந்த தனபால், பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதே புரோக்கர் கும்பல் சந்தியாவின் புகைப்படத்தை மற்றொரு இளைஞருக்கு திருமணத்துக்கு அனுப்பியதை தனபால் அறிந்து கொண்டார். இதனால் சந்தேகம் அதிகரித்த அவர், போலீஸாருடன் கலந்தாலோசித்து ஒரு திட்டம் தீட்டினார். திருச்செங்கோட்டில் மற்ற...