அம்மா, மகள் கர்ப்பம்! காரணம் ஒரே நபர்! உலகை உலுக்கிய வினோத உண்மை! என்ன நடந்தது?
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நிக் யார்டி (Nick Yardy) என்ற 29 வயது இளைஞர், தனது காதலி மற்றும் மாமியாருடன் (சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய்) கொண்டிருக்கும் உறவு காரணமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டு, தனது 22 வயது காதலி ஜேட் (Jade) மற்றும் அவரது 44 வயது தாய் டானி (Dani) ஆகிய இருவரும் தன்னால் கர்ப்பமடைந்துள்ளதாக அறிவித்தார். ஜேட் ஒரு பெண் குழந்தைக்கு (நிகோல் என்று பெயரிட திட்டம்) மற்றும் டானிஒரு ஆண் குழந்தைக்கு (நிக்கி ஜூனியர்) தாய்மையடைய உள்ளதாகக் கூறி, கர்ப்ப பரிசோதனை அட்டைகளையும் காட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் டெய்லி மெயில் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், நிக் யார்டி இது வெறும் நகைச்சுவை மற்றும் பரோடி (parody) மட்டுமே என்று தெளிவுபடுத்தினார். "இது ஒரு ஜோக் தான், எங்களது பொழுதுபோக்குக்காக செய்தோம்" என்று கூறினார். உண்மையில் எந்த குழந்தையும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். எனினும், அவர் ஜேட் மற்றும் டானி ஆகிய இருவருடனும் உண்மையான பாலிமோரஸ் உறவு (pol...