Posts

Showing posts with the label mosque stabbing

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்த ‘அஷ்ரத்’ அப்துல் அஜீஸ் - வெளிவராத புகைப்படங்கள்!

Image
விருதுநகர், நவம்பர் 23 : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் மந்திரிக்க சென்ற 22 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர், கூச்சலிட்டு தப்ப முயன்றதால் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது 25) நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் (மந்திரவாதி) ஆக பணியாற்றி வருகிறார். இன்று மாலை நரிக்குடி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது தனிமையில் இருந்த இளம்பெண்ணை அப்துல் அஜீஸ் திடீரென பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டு தப்பியோட முயன்ற போது, அப்துல் அஜீஸ் தன்னிடமிருந்த சிறிய கத்தியால் கழுத்து, கைகள் உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை குத்தியுள்ளார். வலியால் துடித்த இளம்பெண் பள்ளிவாசலுக்கு வெளியே வந்து மீண்டும் கூச்சலிட்டார். அவரது குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அப்துல் அஜீஸை மடக்கிப் பிடித்து நரிக்குடி காவல் நிலையத...