Posts

Showing posts with the label chain snatching

காதல் தான் முக்கியம்.. பெற்றோரை தூக்கி எறிந்த 19 வயசு பெண்.. இறுதியில் காந்திருந்த ஷாக்..

Image
செங்கல்பட்டு, நவம்பர் 19 : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சரண், தனது 19 வயது காதல் மனைவி மதுமிதாவை சந்தேகத்தால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை, கொடூர கொலையில் முடிவடைந்தது. சரண், தாலி செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு, கஞ்சா கடத்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மதுராந்தகம், சூனாம்பேடு, மாகரல், சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்பு சிறை சென்று வெளியே வந்திருந்த சரண், தனது சொந்த ஊரைச் சேர்ந்த மதுமிதாவை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் அண்டை வீட்டினர் என்பதால், அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர். இருவரின் காதல் விவகாரம் மதுமிதா குடும்பத்தினருக்குத் தெரியவந்ததும், அவர்களை கண்டித்துள்ளனர். இதனால், நான்கு மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும...