மதுரை அருகே காமம் தலைக்கேறிய பெண் செய்த காரியத்தை பாருங்க! ஈரக்குலை நடுங்கும் அசிங்கம்!
மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் உள்ள ஜிஆர் நகரைச் சேர்ந்த 26 வயது வைஷ்ணவி என்பவர், தன் 32 வயது கணவர் செந்தில்குமாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்குமார் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரும் பணத்தை அனுபவிக்கவும், தன் உறவினரான காதலன் வெங்கடேஷுடன் (வெங்கடேசன்) தொடர்ந்து உல்லாச வாழ்க்கை நடத்தவும் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். செந்தில்குமார் சிறு வயதிலேயே தாய்-தந்தையை இழந்தவர். தன் மனைவி வைஷ்ணவி மற்றும் 5 வயது மகளுடன் ஒரு சொந்த குடும்பம் அமைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவர் ஒரு இன்ஜினியர். மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், மகளை பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்தார். பல இடங்களில் வேலை தேடியும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காததால், ஓமன் மஸ்கட்டில் வேலை கிடைத்ததும் உடனடியாக அங்கு சென்றார். அங்கு பணியாற்றியபோது வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊர் வந்து சென்றார். இந்த இடைவெளியை தன் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்திக் கொ...