“ஒரே நேரத்தில் இரண்டு பேர்..” செங்கல்பட்டு அருகே காமம் தலைக்கேறிய பெண் செய்த கொடூரத்தை பாருங்க!
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது கவிதா என்பவர், தனது கள்ளக்காதலுக்காக கணவருக்கு விஷம் கலந்த மது பாட்டில் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கணவர் சுகுமார் (27) உடன் அவரது நண்பர் ஒருவரும் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவிதா மற்றும் சுகுமார் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுகுமார் உள்ளூர் கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பம் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டது. இதனால் கவிதா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். வேலை இடத்தில் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டு, அது பின்னர் தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. கணவர் மது போதையில் இருந்த நேரங்களில், கவிதா தனது உடல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த உறவைத் தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த உறவு நாளுக்கு நாள் ஆழமடைந்ததால், கவிதாவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதை சுகுமார் சந்தேகித்து மனைவியை ரகசியமாக கண்காணித்தபோது, உண்மை வெளியானது...