இந்த நேரத்தில் ஆணுறை அவசியமில்லையா? கொந்தளித்த காஜல் அகர்வால்!
2015ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வால், ஒரு பிரபல ஆணுறை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்றுக்கொண்டார். ஆனால் இந்த செய்தி வெளியானதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில், காஜல் அந்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு, ஆணுறை விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் அப்படியே முடிந்துவிடவில்லை. 2017-2018 ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தொலைக்காட்சிகளை அதிக அளவில் குழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற காரணத்தை முன்வைத்து, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு பல தரப்பினரிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல நடிகைகள் குரல் கொடுத்தனர். அதில் முன்னணியில் நின்றவர் காஜல் அகர்வால். இந்தியா டுடே கான்ட்ளேவ் சவுத் 2018 நிகழ்ச்சியில் பேசிய அவர், ...