ஆள் இல்லாத காட்டில் காதலனுடன் சென்ற போது மயங்கிய காதலி.. கண் விழித்த போது பேரதிர்ச்சி.. சினிமாவுல கூட பார்த்த கொடூரம்..!
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே குருங்கலூரைச் சேர்ந்தவர் 23 வயதுடைய காளிதாஸ். இவர் பெரிதும் படிக்காத நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். எனவே அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் சந்தைகளில் சமோசா கடை போடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதுபோல அரிமளம் சந்தையில் சமோசா கடை போட்ட போது சமோசா வாங்க வந்த அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய உஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் வழக்கம் போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் வனப்பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த காளிதாஸ் காதலியின் துப்பட்டாவை பயன்படுத்தி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தகவல் அறிந்து சம...