சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்.. புதிய தலைவர் யார் தெரியுமா? இளம் தலைவர் to வாக்கு நீக்கம் வரை.. அதிரடி தகவல்கள்..
சென்னை, விருகம்பாக்கத்தில் ஆகஸ்ட் 10, 2025 அன்று நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் பரத் தலைமையிலான ‘சின்னத்திரை வெற்றி அணி’ வெற்றி பெற்றது. இத்தேர்தலில் பரத் 491 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின, இதில் 77 தபால் வாக்குகளும், 859 நேரடி வாக்குகளும் அடங்கும். தேர்தலில் மூன்று அணிகள் தினேஷ் தலைமையிலான ‘உழைக்கும் கரங்கள் அணி’, சிவன் சீனிவாசன் தலைமையிலான ‘வசந்தம் அணி’, பரத் தலைமையிலான ‘சின்னத்திரை வெற்றி அணி’ மற்றும் சுயேச்சையாக நடிகை ஆர்த்தி கணேஷ் போட்டியிட்டனர். 23 பதவிகளுக்கு (தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 14 கமிட்டி உறுப்பினர்கள்) 69 பேர் போட்டியிட்டனர். வாக்குரிமை பறிப்பு சர்ச்சை: நடிகை ரவீனா தாஹா, தனது வாக்குரிமை பறிக்கப்பட்டதாக வேதனையுடன் தெரிவித்தார். விஜய் டிவி சீரியலில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, ஒளிபரப்புக்கு முன் விலகியதால் அவருக்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்டு, ஒரு வருடம் சீரியல்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், அவருக்கு வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டதாக கூறப்...