“பார்க்காததை பாத்த மாதிரி.. முதலிரவுக்கு முன்பே..” கணவன் செய்த கொடூரம்.. விவாகரத்து குறித்து கூச்சமின்றி கூறிய நடிகை!
சென்னை: பிரபல தமிழ் சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். 'வம்சம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான சந்தியா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை கூச்சமின்றி பகிர்ந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சந்தியா ஜாகர்லமுடி, தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் பிரபலமான நடிகை. ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான 'வம்சம்' சீரியலில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த இவர், அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், அவரது திருமண வாழ்க்கை வெறும் இரண்டு நாட்ளிலேயே முடிவுக்கு வந்தது குறித்து அவர் அளித்த பேட்டி இப்போது வைரலாகி வருகிறது. பேட்டியில் சந்தியா கூறியதாவது: "எங்களுடைய நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, திருமணமும் நடக்கவில்லை, முதல் இரவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாளிலிருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விட்டது. என்னுடைய செல்போனை அடிக்கடி வாங்கி சோதனை செய்வது போன்ற பழக்கம் அவருக்கு...