மனைவியின் அடங்காத உடலுறவு வெறி! ஒரே நேரத்தில் இரண்டு முறை! வினோதமான உடலுறவால் அரங்கேறிய அசிங்கம்!
ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் ஆர்காபுரத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சீதாராம் (Seetharam) தனது மனைவி ரேணுகாவின் (Renuka) திருமணத்தை மீறிய தகாத உறவுகளால் மிகுந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்த 19 பக்க உருக்கமான கடிதம் வெளியாகி, ஒட்டுமொத்த ஆந்திராவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு ரேணுகாவுடன் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சீதாராம், ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று வந்த அவர், குடும்பத்தை நல்ல முறையில் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரேணுகா ரமணா ரெட்டி (Ramana Reddy), ஸ்ரவன் (Sravan) உள்ளிட்ட மூன்று ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாக சீதாராம் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். காணாமல் போன பின்னர் ஏரியில் சடலம்... குடும்பத்தினருக்கு சந்தேகம் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வீட்டிலிருந்து காணாமல் போன சீதாராம், பிப்ரவரி 9ஆம் தேதி ஹைதராபாத்தின் பிரபல ஹுசைன் சாகர் ஏரியில் சடலமாக மீட்கப்பட...